பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேலையில்லா அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வரப்பிரசாதமான திட்டமாகும். நீங்கள் படித்திருக்கலாம்(அட...பெரிய படிப்பெல்லாம் இல்லைங்க எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்) ஆனால் சொந்தமாக தொழில் துவங்கி நீங்கள நாலுபேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ளலாம். நீங்கள் வேலைக்கு சென்று
உங்கள் மனைவி வீட்டில் சும்மா இருக்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் ஒருவரது சம்பளம் நிச்சயம் பற்றாக்குறை தான். அவர்களுக்கு தெரிந்த தொழிலை செய்து அவர்கள் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் மைத்துனர் வேலைவெட்டிஇல்லாமல் சும்மா சுற்றிவரலாம்.உங்கள் மேற்பார்வையில் அவருக்கு தொழில்தொடங்கி கொடுக்கலாம். இதில் வயது வரம்பு இல்லாதது நமக்கு கிடைத்த கூடுதல் வசதி.சரி இதில் எவ்வளவு ரூபாய் அதிகபட்சமாக கடன் வாங்கலாம்? நீங்கள் பொருள் உற்பத்தி செய்தால் ரூபாய் 25,00,000 லட்சமும் சேவை பிரிவாக இருந்தால் ரூபாய் 10,00,000 லட்சமும் பெறலாம். நீங்கள் உற்பத்தி பிரிவில் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைபிரிவில் 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும்தான்நீங்கள் எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும்.
From Velan.
For more info gog to : http://velang.blogspot.com/2009/12/blog-post_04.html